காலிமுகத்திடலில் கொட்டும் மழையிலும் வெடித்துள்ள பாரிய மக்கள் புரட்சி.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக் காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருவதுடன்,தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெருந்திரளானவர்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் ‘கோட்டா கோ ஹோம்’‘GoHomeGotta’ என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை,கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வண்ணம் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு தற்காலிக கூடாரங்கள்,உணவு,மெத்தைகள் மற்றும் நகரும் கழிப்பறைகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
Post a Comment