கிளிநொச்சியில் பெய்த கன மழையால் வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்பட்டன.
இன்று பகல் ஒரு மணி முதல் இரண்டு முப்பது மணி வரை கொட்டித்தீர்த்த மழை காரணமாக வீதிகள், மற்றும் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் நிரம்பியிருந்தன.
சில பகுதிகளின் ஊடான போக்குவரத்திற்கும் மக்கள் சில மணி நேரம் சிரமத்தை எதிர்நோக்கினர். குறிப்பாக கிளிநொச்சியின் நகரப் பகுதிகளின் சில இடங்கள் வெள்ள நீரினால் நிரம்பியிருந்தன.
கடந்த சில நாட்களாக அதிகரித்துக் காணப்பட்ட கடும் வெப்ப நிலைமையில் தற்போது பெய்துள்ள மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி இரணைமடு பகுதியில் 26.9 மில்லி மீற்றர் மழைப் பதிவாகியுள்ளது.
Post a Comment