முல்லை குமுழமுனை வயல் வெளியில் இடம்பெற்ற அதிசயம் - பார்வையிட படையெடுக்கும் மக்கள் கூட்டம்.
புராதன வரலாற்றுக் கிராமமான குமுழமுனையில் உள்ள வயல் வெளியில் உள்ள மரமொன்றில், மக்கள் ஆச்சரியப்படும் வகையில் நீர் சீறி பாய்ந்து வருவதனால் அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இச் சம்பவமானது இன்று ஞாயிற்றுகிழமை (24-04-2022) காலை தொடக்கம் இடம்பெற்று வருகின்றது.
குமுழமுனை பண்டாரிக்குளம் வயல்வெளியில் மதுர மரங்கள் சூழ்ந்து நிற்கும் நடுப்பகுதியில் நறுவுளி மரம் ஒன்று அமைந்துள்ளது.
அம் மரத்தின் ஒவ்வொரு கிளையிலிருந்தும் நீர் சீறி பாய்வதை அவதானிக்க முடிகின்றது.
மேலும், இதனை வயல் வெளிக்கு சென்ற மக்கள் அவதானித்தனை அடுத்து ஊர் மக்கள் பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
Post a Comment