பாராளுமன்றத்தில் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட சாணக்கியன் எம்பி.
நாட்டில் பரபரப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றம் கூடியது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு முட்டு கொடுத்து பேசியபோது, அருகில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் , முஷாரப் இற்கு 5000 ரூபா பணத்தை நீட்டிய சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் , பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துவருகின்றனர்.
அதோடு பல அரசியல் முக்கியஸ்தர்கள் நாட்டைவிட்டு தப்பியோடி வருகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியபோது முஷாரப் அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக பேசியபோது சாணக்கியன் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு பணத்தை எடுத்து நீட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சபையில் களேபரம் ஏற்பட்டதுடன் ஆளுங்கட்சி எம்.பிக்கள் சாணக்கியனுக்கு எதிர்ப்பினை வெளியிட்டதாக கூறப்படும் நிலையில், குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Post a Comment