ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்.
நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் முதற்கட்ட கலந்துரையாடலில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன் நிதி, வலுசக்தி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் மற்றுமொரு கலந்துரையாடலும் இடம்பெற்றது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment