Header Ads

test

இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் தொடர்பில் வெளிவந்த தகவல்.

 பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, சட்டபூர்வமான சேவை நீடிப்பு இன்றி தற்போதைய பதவியை வகிப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

ஜெனரல் சில்வாவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்னும் செல்லுபடியாகும் என்றும் அது டிசம்பர் 31, 2021 முதல் அமுலுக்கு வந்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் 23வது தளபதியாக சவேந்திர சில்வா 17, ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments