கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற பதற்ற நிலை - குவிக்கப்பட்ட பொலிஸார்.
கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்த மக்களினால் எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை இரவு (27-04-2022) கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுப்பட்டிருந்த போதிலும், பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மக்கள் வீதிகளை மறித்து அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்து வரும் நிலையில் அதற்கு பயனின்றி போகும் சந்தர்ப்பத்தில் ஆவேசத்துடன் நடந்துவருகின்றனர்.
மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக நேற்று நள்ளிரவில் இருந்தும் இன்று அதிகாலையில் இருந்து குறித்த எரிபொருள் நிலையத்தில் முன் மக்கள் வீதிகளில் உறங்கி மக்கள் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment