மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் தலைமறைவு.
மாத்தறை, கிரல கெலே பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்த நபரை மாலிம்படை மத்திய பிரதேசத்தில் இருந்து லொறி ஒன்றில் ஏற்றிச் சென்று அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 43 வயதான மாலிம்பட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொலைக்கு உதவிய குற்றத்திற்காக மாத்தறையைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் மருமகன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாலிம்படை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment