காலி முகத்திடல் போராட்டக்களத்திற்கு சென்ற இலங்கையின் பிரபலம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருவதுடன்,தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெருந்திரளானவர்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறித்த போராட்டத்திற்கு இலங்கையின் முக்கியஸ்தர்கள் பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில்,இலங்கையின் கிரிக்கட் ஜாம்பவான் குமார சங்கக்காரவின் மனைவி காலி முகத்திடல் போராட்டக்களத்திற்கு சென்று தமது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
Post a Comment