சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளிவந்த தகவல்.
அதிக தேவை தொடர்பான முன்னுரிமை அடிப்படையில் சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனமொன்றின் பேச்சாளரொருவர் கூறுகையில்,
நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த 1,400 மெட்ரிக் தொன் எரிவாயு விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதிக தேவை உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கப்பலிலிருந்து எரிவாயு இறக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது. இந்த மாதம் கோரப்பட்டுள்ள மேலும் இரண்டு எரிவாயு தாங்கி கப்பல்கள் இலங்கைக்கு வர உள்ளன.
இந்த கப்பல்கள் பெரும்பாலும் எதிர்வரும் 24 மற்றும் 26ஆம் திகதிகளில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றின் மூலம் மொத்தமாக 8,500 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டுவரப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment