Header Ads

test

கோழி முட்டையின் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.

 எதிர்காலத்தில் நாட்டில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயை விட அதிகரிக்கலாமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதோடு, இந்த விலை உயர்வை தடுக்க முடியாதெனவும் அவர் திட்டவட்டமாக கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

முட்டை உற்பத்தியின்போது கோழி உணவுக்கு தேவையான இரசாயனங்களில் வெறும் 3 இராசயனங்களே உள்ளநாட்டில் காணப்படுகிறது. ஏனைய 11 இராசாயனங்களும் வௌிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதனால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேசமயம் வீடுகளில் முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்காக 26 ரூபாய் செலவிடப்படுகிறது. கிராமிய விவசாயிகள் முட்டை ஒன்றுக்காக 31 ரூபாயை செலவிடுகிறார்கள்.

எனினும் 20 - 21 ரூபாயை செலுத்தியே விவசாயிகளிடமிருந்து முட்டையைப் பெற்றுக்கொள்கிறார்கள் எனவும் கூறினார்.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக் காரணமாக கோழிகளின் உணவுகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் உரிய தரப்பினர் விரைவாக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். 


No comments