Header Ads

test

சாரதியின் உறங்கத்தால் நடு வீதியில் பறிபோன உயிர்.

 இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 57/2 மைல் கல்லிற்கு அருகில் வெற்று பியர் போத்தல்களுடன் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனமே விபத்திற்குள்ளாகியுள்ளது.

 சாரதியின் உறங்கத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த சாரதி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த லொறி உதவியாளரின் சடலம் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்துக்குள்ளான லொறி கொழும்பு பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றுக்கு சொந்தமானது எனவும் சாரதி மற்றும் உதவியாளரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


No comments