அரசுக்கு எதிராக களமிறங்கியுள்ள கத்தோலிக்க மதகுருக்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் .
கொழும்பு - பொரளைச் சந்திக்கருகில் கத்தோலிக்க மதகுருக்கள், கன்னியாஸ்திரிகள் இணைந்து அமைதியான முறையில் அரசுக்கெதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதி வணக்கக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட அருட்சகோதரிகள் மற்றும் அருட்தந்தையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
அதேசயம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசங்கத்தை பதவி விலகுமாறு நாடாளாவிய ரீதியில் மக்கள் போராட்டத்தில் ஈருபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment