இந்தியாவிலிருந்து அத்தியாவசிய மருந்துப் பொருட்களுடன் நாளை இலங்கை வரவுள்ள கப்பல்.
அத்தியாவசிய மருந்துப் பொருட்களை ஏற்றிவரும் கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது.
இந்திய கடனுதவியின் கீழ், 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கை பெற்றுக்கொள்ள உள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்னராக தெரிவித்திருந்தார்.
கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு கடன் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சுமார் 100 நாட்கள் வரை செல்லும் எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில் அதுவரை இந்தியாவிலிருந்து கடன் வழங்குதலின் கீழ் மருந்து விநியோகம் தொடரும் எனவும் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
Post a Comment