மது போதையால் அநியாயமாக பறிபோன உயிர்.
ஹிக்கடுவ, வெல்வத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் ஹொரண பிரதேசத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மது அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய 31 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் காலி, ஹல்லாஹிதிகல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
Post a Comment