மகாநாயக்க தேரர்கள் அரசுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் தமது சிறப்புரிமைகளை மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்க வேண்டுமென மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இந்த கூட்டறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி மக்களுக்கான உடனடி நிவாரணம் கோரி ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்ட தமது முன்மொழிவுகள் புறக்கணிக்கப்பட்டமைக்கு மகாநாயக்கர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
புதிய அமைச்சரவையை நியமிப்பதன் மூலம் நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்காது என மகாநாயக்கர்கள் உறுதியாக நம்புவதாகவுமு் தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி உயிரிழந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த மகாநாயக்கர்கள், இலங்கையில் அவ்வாறானதொரு துரதிஷ்டமான சூழல் உருவாக்கப்படாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தினதும் ஏனைய அனைத்து உறுப்பினர்களின் பொறுப்பு எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்,நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அடுத்தடுத்து வரும் அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பேற்க வேண்டும் என இலங்கையின் மூன்று பிரதான பௌத்த பிரிவைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது பிரேரணைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுமானால், மூன்று பிரிவினரையும் ஒன்றிணைத்து சங்க ஆணை பிறப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment