முல்லைத்தீவில் இருந்து இந்தியாவில் கரை ஒதுங்கிய படகு.
முல்லைத்தீவில் இருந்து கடல் தொழிலிற்குச் சென்ற இரு கடற்தொழிலாளர்களுடன் படகு ஒன்று இயந்திரக்கோளாறு காரணமாக இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளது.
முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இரு கடற்தொழிலாளர்கள் பயணித்த படகு இன்று தூத்துக்குடியில் கரை ஒதுங்கியுள்ளது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தையும் மன்னார் மாவட்டத்தையும் சேர்ந்த இரு கடற்தொழிலாளர்கள் இந்தியாவில் கரை சேர்ந்ததாகக் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் இந்தியப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment