நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழப்பு.
கேகாலை - மாவனல்லை பகுதியில் உள்ள மியான் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவர் மாவனல்லை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள மியான் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற வேளையில் நீர்வீழ்ச்சியின் கரையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது படுகாயமடைந்த மாணவன் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குண்டசாலை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment