சதொச விற்பனை நிலையங்களில் வழங்கப்படவுள்ள அரிசியின் விலை தொடர்பில் வெளியான தகவல்.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசி வாடிக்கையாளரொருவருக்கு அதிகபட்சமாக 5 கிலோ வீதம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
இதற்கமைய,வெள்ளை அரிசி - கிலோ 145 ரூபாய், நாட்டு அரிசி - கிலோ 145 ரூபாய், சம்பா அரிசி - கிலோ ரூ.175 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
Post a Comment