Header Ads

test

புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்.

 புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று (05) இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

முன்னதாக, பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சு பதவியிலிருந்து நீக்கி, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கியதாக தற்காலிக அமைச்சரவையை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதற்கமைய, புதிய அமைச்சரவையின் நிதியமைச்சராக அலி சப்ரி நேற்று (04) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அலிசப்ரி, நேற்று ஜனாதிபதி கோட்டாபயவினால் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் இன்று இராஜினாமா செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   


No comments