யாழில் வீடியோ கேமால் பறி போன இளைஞனின் உயிர்.
யாழ். இளவாலை பகுதியில் தொலைபேசியில் தொடர்ச்சியாக (வீடியோ கேம்) விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று (27) காலை இடம்பெற்றுள்ளது.
தொலைபேசியில் ஆயுதப் போர் (வீடியோ கேம்) விளையாடுவது இளைஞனின் அண்மைக்கால நடவடிக்கையாக இருந்துள்ளது.
அதில் மூழ்கிப் போன இளைஞன், நேற்று காலை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இளைஞனின் சடலத்தில் காதுகளில் மாட்டிய ஹெட்செட் மற்றும் சட்டை பையில் அவரது தொலைபேசி என்பன காணப்பட்டுள்ளது.
சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு உடக்கூற்றுப் பரிசோதனை மற்றும் இறப்பு விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment