நாட்டு மக்களுக்கு பேரிடியாக மாறிய எரிவாயுவின் விலை.
லிற்றோ (12.5 கிலோ) சமையல் எரிவாயுவின் விலையை ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்குமாறு லிற்றோ நிறுவனம், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
லிற்றோ சமையல் எரிவாயு தற்போது 2 ஆயிரத்து 675 ரூபாவுக்கு விற்பனையாகின்றது. இந்நிலையில் டொலர் இல்லாத காரணத்தால் எரிவாயு இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
அதேவேளை ஆயிரத்து 800 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவுடன், கப்பலொன்று கடந்த 12 ஆம் திகதி இலங்கை வரவிருந்த நிலையில் டொலர் இல்லாத காரணத்தால் நிறுவனம் ஐந்து நாட்கள் எரிவாயு விநியோகத்தை நிறுத்தி இருந்தது. இந்த நிலையிலேயே மேற்படி கோரிக்கையை லிற்றோ நிறுவனம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment