அமெரிக்க தூதுவர் ஜீலி சங் இன்று முகமாலை பகுதிக்கு விஜயம்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜீலி சங் இன்று காலை முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க கொடையாளர்களின் நிதி உதவியில் முகாமாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டுள்ளார்.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்ட அமெரிக்க தூதுவர், கள ஆய்வினையும் மேற்கொண்டு அங்கு கடமையில் ஈடுபட்டுள்ள மனிதநேய கண்ணிவெடி அகற்றம் பணியாளர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
தொடர்ந்து குறித்த பகுதியில் அகற்றப்பட்ட ஆபத்து மிக்க வெடி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment