யாழில் இடம்பெற்ற தேங்காய் போர்.
யாழ்ப்பாணம் சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் சங்கானை மாவடி ஞானவைரவர் ஆலய முன்றலில் பாரம்பரிய தேங்காய்ப் போர் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான தேங்காய்களுக்கு இடையிலான போர் விளையாட்டு கடந்த சில வருடங்களாக சங்கானை மண்ணில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment