சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் தொடர்பில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சு.
சர்வதேச ரீதியாக இலங்கை பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தும் செயற்பாட்டை தற்காலிகமாறு இடைநிறுத்தவுள்ளதாக இலங்கையின் நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி 2022 ஏப்ரல் 2ஆம் திகதி வரையிலான கடன் நிலுவைகளே இடைநிறுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது எனினும் எந்தளவு காலத்துக்கு இந்த கடன் மீள்செலுத்தல் இடைநிறுத்தப்படுகிறது என்ற விடயத்தை நிதியமைச்சு தெரிவிக்கவில்லை. எனினும் குறிப்பிட்ட திகதிகக்கு பின்னர் பெறப்பட்ட கடன்களுக்கு இந்த நடவடிக்கை செல்லுபடியாகாது.
இந்தநிலையில் இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்புக்களுக்கு செலுத்த வேண்டிய தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியன பின்னர் செலுத்தப்படும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நிலுவையில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட சாதாரண வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை இடை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளது. அதற்கான நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment