கோட்டாபய ராஜபக்ச அரசிற்கு எதிராக ஜெனிவாவில் ஒன்று திரண்ட சிங்கள மக்கள்.
ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்பாக பெருமளவான சிங்கள மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களிலும், எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் அந்த அந்த நாடுகளில் ஒன்று திரண்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜெனிவாவிலும் பெருமளவான சிங்கள மக்கள் ஒன்று குவிந்து கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றும், நெருக்கடி நிலை தீர்க்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகின்றனர்.
Post a Comment