பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை சுற்றிவளைத்துள்ள பெருமளவு மக்கள் கூட்டம்.
இலங்கை அரசாங்கத்திக்கு எதிராக மக்கள் போராட்டம் நாடாளவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது.
தற்போது தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு அருகில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுவருகின்ற நிலையில், இன்றைய தினம் நாடாளவிய ரீதியில் பல தொழிற்சங்கள் கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தங்காலையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகில் பெருமளவு மக்கள் குவிந்துள்னர்.
ரம்புக்கனையில் நேற்றையதினம் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
Post a Comment