Header Ads

test

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தாக்குதல்.

 வவுனியாவிலுள்ள பிரபலமான பாடசாலை ஒன்றில் தரம் ஐந்து 2022 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதனால் குறித்த மாணவன் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து படிப்பதற்கு மறுத்து வருவதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பெற்றோர் மேலும்  தெரிவிக்கையில்,

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பிரபலமான பாடசாலை ஒன்றில் தரம் ஐந்து 2022 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவனைத் தொடர்ந்து ஆசிரியர் தாக்கி வருகின்றார்.

இன்றும் இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவனுக்குக் காயம் ஏற்படுகின்றது. இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகிய மாணவனின் பெற்றோர் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ்விடயத்தை மீண்டும் மீண்டும் வலயத்தில் முறையிட்டு பாடசாலையின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த விரும்பவில்லை. அதேவேளை இவ்வாறு தொடர்ந்தும் மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்வதை அனுமதிக்கவும் முடியாது.

எனவே இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்திப் பாதிக்கப்பட்டுள்ள மாணவனுக்கு நீதியைப் பெற்றுத்தருமாறும் குறித்த மாணவனுக்கு ஏற்பட்டுள்ள உள ரீதியான பாதிப்புக்களைச் சீரமைக்கப் பாடசாலை அதிபர் மற்றும் கல்வி நடவடிக்கைப்பிரிவு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ்வருடம் இடம்பெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் பாடசாலை ரீதியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments