Header Ads

test

யாழில் இடம்பெற்ற ஆசிரியர் பயிலுநர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு.

 யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிலுநர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது இன்று(29) காலை இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் தலைவர் எஸ்.பரமானந்தம் தலைமையிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது பல்வேறு பாடவிதானங்களை கொண்ட ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் விவசாயம், கலை விஞ்ஞானம், கணிதம் ஆங்கிலம் மற்றும் சமயம் உள்ளிட்ட 18 வகையான பாடவிதானங்களை கற்பிக்கும் 355 டிப்ளோமா ஆசிரியர் பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர். வரதீஸ்வரர் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார் மற்றும் கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Gallery Gallery 

No comments