ஊரடங்கு தொடர்பில் வெளிவந்த தகவல்.
ஜனாதிபதியின் தனிப்பட்ட வீடு முற்றுகையை அடுத்து கொழும்பிலும் கொழும்பின் புறநகர்களிலும் அமுல் செய்யப்பட்ட காவல்துறை ஊரடங்கு இன்று காலை 5 மணியுடன் விலக்கிக்கொள்ளப்பட்டதாக காவல்துறையின் பேச்சாளார் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை செலவை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் அவசியம் என கோரி பொதுமக்கள் நேற்று இரவு நடத்திய போராட்டத்தை அடுத்து கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, நுகேகொட, கல்கிஸ்ஸை, மற்றும் களனி ஆகிய இடங்களில் காவல்துறை ஊரடங்கு அமுல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment