மட்டக்களப்பில் 20 வயது யுவதி ஒருவரின் செயலால் அதிர்ச்சியில் பொலிஸார்.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று (24) பகல் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் குறித்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று(24) பகல் பிறந்துறைச்சேனை கோவில் வீதியில் உள்ள குறித்த வீட்டை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிஎஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன் போது போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய பெண்ணை கைது செய்ததுடன் 780 மில்லிக்கிராம் ஹெரோயின், 2784 மில்லிக்கிராம் கேரளா கஞ்சா, மற்றும் ஐந்து போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குறித்த பெண் ஏற்கனவே இரண்டு தடவைகள் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment