யாழ். கந்தரோடையில் புதிதாக முளைவிட்ட புத்தர் சிலை - ஸ்தலத்திற்கு விரைந்த முக்கியஸ்தர்கள்.
யாழ். கந்தரோடையில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்படுகின்றது என அப்பகுதி இளைஞர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் அவர்களிடம் முறையிடப்பட்டதை தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்று நிலைமையினை ஆராய்ந்துள்ளார்.
இன்றைய தினம் குறித்த இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் சென்றதுடன் அங்கு நின்றிருந்த பௌத்த மதகுருவிடம் இது தொடர்பில் வினவியிருந்தார்.
குறித்த சந்திப்பின் போது அதிகளவான இராணுவத்தினர் பிரசன்னமாகியிருந்ததாக அங்கிருந்தவர்களால் அவதானிக்கப்பட்டது.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினருடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் உட்பட்ட பலர் அப் பகுதிக்கு பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment