மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மாலைதீவில் கடந்த மாதம் 26ஆம் திகதி உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தது.
இந்த நிலையில் குறித்த பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பூதவுடலை பெற்றுக் கொள்ள அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
சடல பரிசோதனையின் பின் பூதவுடல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அஞ்சலிக்காக யாழிற்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் எதிர்வரும் 5ஆம் திகதி மன்னார் பனங்கட்டுக் கொட்டிலில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக எடுத்து வரப்படும் என கூறப்பட்டுள்ளது.
அன்றைய தினம் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் பூநகரி, முழங்காவில் , தேவன் பிட்டி போன்ற இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட கழக வீரர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பவனியாக எடுத்து வரப்படும் எனவும், எதிர்வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் பொது மயானத்தில் சடலம் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment