நாட்டு மக்களுக்கு எரிவாயு நிறுவனங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை.
டொலர்களை வழங்கிய பின்னர் நேற்று 3 ஆயிரத்து 500 மெற்றி தொன் சமையல் எரிவாயு விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகை சுமார் மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானது என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் சுமார் 200 மெற்றி தொன் எரிவாயுவை தொழிற்சாலைகளுக்கு வழங்குவதுடன் மீதமுள்ள எரிவாயு 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.5 கிலோ கிராம் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
ஒரு தொன் எரிவாயு மூலம் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட 80 கொள்கலன்களை மாத்திரமே நிரப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கலன்களின் அளவுக்கு அமைய ஒரு தொன் எரிவாயு நிரப்பப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
லிட்ரோ நிறுவனம் விநியோகித்துள்ள பல அளவுகளிலான 70 லட்சம் கொள்கலன்கள் விற்பனை முகவர்கள் மற்றும் மக்களிடம் உள்ளன. இவற்றில் 55 லட்சம் கொள்கலன்கள் 12.5 கிலோ கிராம் கொள்ளவை கொண்டவை எனவும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment