Header Ads

test

எமக்கான தீர்வு ஐ.நாவில் கிடைக்கும் வரை போராடிக்கொண்டு இருப்போம் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கச் செயலாளர் தெரிவிப்பு.

 காணாமல் போன உறவுகளுக்கு ஐ.நாவில் தீர்வு கிடைக்கும் வரை போராடிக்கொண்டு இருப்போம் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கச் செயலாளர் தேவசகாயம் ரஞ்சனா தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் நேற்று (18) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது,

எமது உறவுகளைத் தேடி 11 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கின்றோம்.இந்நிலையில் எங்கள் நாட்டு அரச தலைவர் எமது காணாமல் போன உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கவுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த ஒரு இலட்சம் ரூபா தான் எமது உறவுகளின் உயிரின் மதிப்பா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

இதனை 08 மாவட்டத்திலும் இருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் சார்பில் கண்டிக்கின்றோம்.அத்துடன் எமக்கான தீர்வு ஐ.நாவில்  கிடைக்கும் வரை போராடிக்கொண்டு இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.


No comments