Header Ads

test

முல்லைத்தீவு மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ள கபடி அணி வீரன் வசந்தகுமார்.

முல்லைத்தீவு மாந்தைகிழக்கு வன்னிவிளாங்குளம் அம்பாள்புர கிராமத்தைக் சேர்ந்த வசந்தகுமார் பங்களாதேஷ் டாக்காவில் தற்போது நடைபெறும் 2022 ம் ஆண்டு பங்கபந்து சர்வதேச கபடி போட்டியில் இலங்கை தேசிய  அணியில் வசந்தகுமார் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

குறித்த போட்டியில் பங்களாதேஷ், இந்தோனோசியா, கென்யா, ஈராக், மலேசியா, இலங்கை, நேபாளம் மற்றும் இங்கிலாந்து நாட்டின் தேசிய அணிகள் பங்குகொள்ளும் போட்டி டாக்காவில் தற்சமயம் நடைபெற்றுவருகின்றன 

நாட்டின் தேசிய அணியில் அங்கம் வகித்துள்ள குறித்த விளையாட்டு வீரனை,தமது மாவட்டத்திற்கு பெருமை  சேர்த்துள்ளமையை முன்னிட்டு அம்பாள்புர கிராம மக்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை,மாவட்ட கபடி சங்கம் போன்றன மாவட்ட விளையாட்டு வீரர்கள் சார்பாக தமது  பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





No comments