Header Ads

test

பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு கட்டுத்துவக்கு வெடித்ததில் நேர்ந்த துயரம்.

 திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கட்டுத்துவக்கு  வெடித்ததில் படுகாயமடைந்துள்ள நிலையில் கோமரங்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயம் அடைந்தவர் கோமரங்கடவல - பக்மீகம பகுதியைச் சேர்ந்த பியதாசகே பியந்த குணதிலக (43வயது) என தெரியவருகின்றது.

கடமையை முடித்துவிட்டு குபுக்வெவ பகுதிக்கு மாடு பார்க்க சென்றபோது இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கோமரங்கடவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments