முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான கைக்குண்டுகள்.
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டுகள் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு சன சமூக மண்டபத்திற்கு அருகில் நேற்றைய தினம் நபரொருவர் காணியை துப்பரவு செய்துள்ளார்.
இதன்போது அவரால் குறித்த கைக்குண்டுகள் அவதானிக்கப்பட்ட நிலையில் உடனடியாக முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் அங்கு ஆய்வு பணியினை மேற்கொண்ட போது 176 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அப்பகுதிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து அப்பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு பெறும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment