Header Ads

test

பாடசாலை மாணவியின் உயிரைப் பறித்த நோயார் காவு வண்டி.

 பதுளையில் உள்ள வீதி ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நோயாளர் காவு வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவி உட்பட இருவர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயதுடைய மாணவி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விபத்து பண்டாரவளை வைத்தியசாலையில் இருந்து தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் ஒருவரை ஏற்றிச் சென்ற போது  இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் ரத்கரச்சி பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரர் தற்போது ஆபத்தான நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் தியத்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


No comments