ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் மீட்கப்பட்ட துப்பாக்கிகள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்துக்கு அருகில் உள்ள எம்புல்தெனிய சந்தியிலிருந்து பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இரு விளையாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நேற்று அதிகாலை இந்த இரு விளையட்டுத் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன. மிரிஹானை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த இரு விளையாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக மிரிஹானை பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் மிரிஹானை பொலிஸார் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், அவ்விடத்தில் கடந்த 12 ஆம் திகதி இரவு நாடகம் ஒன்றின் படப்பிடிப்புகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அந்த படப்பிடிப்புக்கு எடுத்து வரப்பட்ட இரு விளையாட்டுத் துப்பாக்கிகளே தவறுதலாக அந்த நாட்டியக் குழுவினரால் மறந்து கைவிடப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Post a Comment