முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவரின் முயற்சியால் சாதனை படைத்து வரும் ஐயன்கன்குளம் மகாவித்தியாலயம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டதும் பின் தங்கிய பிரதேசமாகவும், அடிப்படை வசதிகள் குறைவாகவும் காணப்படுகின்ற பிரதேசமாக ஐயன்கன்குளம் காணப்படுகிறது.
இப் பிரதேசத்தில் அமைந்துள்ள மு/ ஐயன்கன்குளம் மகாவித்தியாலயத்தின் சாதனைகள் தற் காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மு/ ஐயன்கன்குளம் மகாவித்தியாலயம் அதிகஷ்ட பிரதேசத்தில் அமைந்துள்ள போதும், சோதிநாதன் சர்மிலன் என்ற ஆசிரியரின் அர்ப்பணிப்பான முயற்சியின் காரணமாக தரம்_05 புலமைப்பரிசில் பரீட்சையில் தொடர்ந்தும் மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
குறித்த ஆசிரியரின் முயற்சியின் காரணமாக இவ் வருடம் இடம்பெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் கு.சயந்தன் -166,யோ.டினுசிகா - 163, ர.பவிசனா - 162, இ.ஜெயஹர்சினி - 152 ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
அத்துடன் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் 100% சித்தியைப் பெற்றுள்ளார்கள். குறித்த வெற்றிக்கு வழிப்படுத்திய அதிபர் திருமதி கீதா பாலசிங்கம் அவர்களுக்கும் ஆரம்பப்பிரிவு பகுதித்தலைவர் திருமதி சாந்தினி நாகராசன் அவர்களுக்கும் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் கிராம மக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment