எரிபொருள் நிரப்பச் சென்ற இளைஞன் மீது இடம்பெற்ற கத்திக் குத்தில் சம்பவ இடத்தில் பலி.
நிட்டம்புவ − ஹொரகொல்ல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கத்தி குத்துக்கு சம்பவத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
முச்சக்கரவண்டி சாரதிக்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த கத்தி குத்துக்கான காரணம் என பொலிஸார் கூறுகின்றனர்.
இச்சம்பவத்தில் 29 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment