Header Ads

test

யாழில் முன்னெடுக்கப்பட்ட சைக்கிள் பேரணி.

 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களால் சைக்கிள் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மல்லாகத்திலிருந்து வலி.வடக்கு பிரதேச சபை வரை இன்று சைக்கிள் பேரணியாகச் சென்று பிரதேச சபை உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் தற்போதைய பொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பிரதேச சபை அமர்வுக்கு அவர்கள் பேரணியாகச் சென்று எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Gallery Gallery Gallery Gallery

No comments