கிளிநொச்சியில் கணவன் மனைவியை மோதித் தள்ளிய அரச பேருந்து.
கிளிநொச்சி - புதுக்குடியிருப்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று தனது வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் வந்த கணவன் மனைவி இருவர் மீதும் மோதி தள்ளியுள்ளது.
அதே கிராமமான உழவனூர் பகுதியில் மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிய வேளையே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்த கணவன், மனைவி தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்கள் அருகில் உள்ள தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
குறித்த விபத்து காரணமாக அப்பகுதியில் ,இளைஞர்கள் ஒன்று கூடியதால் சற்று நேரம் பதற்ற நிலை காணப்பட்டது. பின்னர் அப்பகுதிக்கு பெருமளவு பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிபடையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்படுள்ளதுடன், நடத்துனர் மற்றும் சாரதிகள் இருவரும் சம்பவ இடத்திற்கு அழைத்துவர வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்திருந்தனர்.
மேலும் நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.பின்னர் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய சம்பவ இடத்திற்கு தடவியல் பொலிஸார் வருகை தந்து சம்பவ இடத்தை பரிசீலித்தனர்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான இருசக்கர வாகனமானது பேருந்தின் முன்சக்கரத்திற்குள் புகுந்த நிலையில் காயத்திற்குள்ளான இருவரும் மக்களால் மீட்கப்பட்டு தர்மபுரம் ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தினை தொடர்ந்து அங்கு கூடிய இளைஞர்கள் பேருந்தினை எடுக்கவிடாமல் முரணபட்ட நிலையில் பொலிஸார், மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகி நிலைமையினை கட்டிற்குள் கொண்டுவந்துள்ளதுடன்,விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment