Header Ads

test

குடிபோதையில் வாகனம் செலுத்திய மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொலிஸாரால் கைது.

 குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலவாக்கலை பொலிஸாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சுகாதாரப் பணிப்பாளர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் விருந்தொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


No comments