Header Ads

test

நாட்டு மக்களுக்கு தலையிடியாக மாறிய இன்னொரு சம்பவம்.

 சமையல் எரிவாயு இல்லாமை காரணமாக சிற்றுண்டிச்சாலைகளில் உணவு வசதிகளை நாளை முதல் முற்றாக நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், 

நாட்டில் சமையல் எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டுவரும் பிரதான இரண்டு நிறுவனங்களும் தங்களின் கைவசம் இருந்த தொகை முடிவுற்றுள்ளதால் சமையல் எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக தெரிவித்திருக்கின்றன.

இதன் காரணமாக பாரியதொரு நெருக்கடிக்கு சிற்றுண்டிச்சாலைகள் முகம்கொடுக்கவேண்டி ஏற்படுகின்றது.

குறிப்பாக சிற்றுண்டிச்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டால் சுமார் 5 இலட்சம் பேரின் தொழில் இல்லாமல் போகும் அபாயம் இருக்கின்றது.

அதனால் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் மற்றும் அதில் பணி புரிகின்ற ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வொன்றை வழங்கவேண்டும்.

இல்லாவிட்டால் நாடுபூராகவும் அமைந்திருக்கும் சிற்றுண்டிச்சாலைகளின் பீங்கான் பாத்திரங்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு ஜனாதிபதி காரியாலயத்துக்கு முன்னால் வந்து கூடாரம் அமைப்போம்.

அத்துடன் சாதாரண சிற்றுண்டிச்சாலைகளுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று அல்லது ஐந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. சிற்றுண்டிச்சாலைகளில் மேலதிக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இல்லாத காரணத்தினால் இன்று முதல் சிற்றுண்டிச்சாலைகளில் உணவு வசதிகளை மேற்கொள்ள முடியாது.

அதனால் சிற்றுண்டிச்சாலைகளை மூடிவிடவேண்டி ஏற்படுகின்றது என தெரிவித்தார்கள்.


No comments