Header Ads

test

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை சுத்தியலால் தாக்கிய மகள்.

 பேருவளை, கலவில கந்த பகுதியில் தாயொருவரை மகள் சுத்தியலால் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

காதல் தொடர்பை நிறுத்துமாறு எச்சரித்ததால் மகள் தனது தாயை சுத்தியலால் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

17 வயதான தனது மகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த தாய் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான மகளை தமது பொறுப்பில் எடுத்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments