இலங்கை அரசின் முக்கிய பதவியை துறந்த மற்றொரு நபர்.
கொத்மலை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக செயற்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
6.9 மில்லியன் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கத்தின் கீழ் பதவியை வகிக்கத் தயாராக இல்லாததால் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராகவும், அரசாங்கத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் ஓரங்கட்டுவதற்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தான் இராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது இராஜினாமா கடிதம் ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment