கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மழை மற்றும் காற்று காரணமாக ஏற்பட்டுள்ள பலத்த சேதம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் திடீரென பலத்த காற்றுடன் பெய்த மழையால் வீடுகள் வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
இன்று பிற்பகல் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக செல்வாநகர் மற்றும் கிருஷ்ணபுரம் பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
தற்போதைய நிலவரத்தின்படி செல்வாநகர் பிரதேசத்தில் மூன்று வீடுகளும், கிருஷ்ணபுரம் பிரதேசத்தில் ஐந்து வீடுகள் மற்றும் முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் விழுந்ததில் முச்சக்கர வண்டி பலத்த சேதம் அடைந்துள்ளது.
வீதிகள் மீது பாரிய மரங்கள் விழுந்தமையால் வீடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment