மட்டக்களப்பில் சிங்களவர் ஒருவர் கூட வசிக்காத பகுதியில் புத்த விகாரை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோறளைபற்று தெற்கு ( கிரான் ) பிரதேச செயலக பிரிவில் சிங்களவர் ஒருவர் கூட வசிக்காத போதிலும் நெலுகல் கிராமத்தில் விகாரை அமைக்கப்பட்டு வருகிறது.
புதிதாக அமைக்கப்படும் இந்த புத்த விகாரை கிரான் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று தெற்கு ( கிரான் ) பிரதேச செயலகப்பிரிவில் 8572 தமிழ் குடும்பங்களும் 49 முஸ்லீம் குடும்பங்களுமாக 28892 பேர் வசிக்கின்றனர். இதில் ஒருவர் கூட சிங்களவர் கிடையாது.
புத்த சமயத்தவர்களோ சிங்களவர்களோ இல்லாத இந்த இடத்தில் புத்த விகாரை அமைக்கப்படுவதன் நோக்கம் என்ன என அப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இப்பகுதி கிராமசேவைகர் ஒருவர் இந்த விகாரையை பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளார் என தெரியவருகிறது.
இவரே வடமுனையில் உள்ள காணிகளை அமிர்அலிக்கு விற்றவர் என்றும் அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த பகுதியில் சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்ளும் வகையில் தரவை குடும்பிமலையில் இருந்து வெலிக்கந்தை வரை 160மில்லியன் ரூபா செலவில் காப்பெற் வீதி அமைக்கப்பட்டு வருகிறது.
மியான்குளம், மகாஓயா, பெரியபுல்லுமலை ஆகிய இடங்களில் ஏற்கனவே சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெலுகல் என்ற கிராமத்திலும் சிங்கள குடியேற்றத்தை மேற்கொண்டு அக்கிராமங்களுடன் இணைக்கும் நோக்குடன் வேலைத்திட்டம் ஒன்று நடைபெற்று வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment